28
March, 2026

A News 365Times Venture

28
Saturday
March, 2026

A News 365Times Venture

”நடிகர் விஜய்யை காமராஜருடன் ஒப்பிடுவதா?” – மாணிக்கம் தாகூர் எம்.பி கேள்வி

Date:

சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய ஒரு மாணவரின் தந்தை “கல்விக்காக பல உதவிகளைச் செய்து வரும் த.வெ.க தலைவர் விஜய்யை ’இளம் காமராஜர்’ என்று அழைக்கலாம்” எனப் பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு அந்த அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது.

கார்த்தி சிதம்பரம்

இதனையடுத்து விஜய்யை காமரஜருடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.  ”காமராஜரின் சரித்திரம், பெருமை,தகுதி பற்றி சரியான புரிதல் இல்லாதவர்களே இப்படி நினைக்கிறார்கள்” என எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.  

அதேபோல விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த விருதுநகர் மக்களவைத்தொகுதியின் உறுப்பினர் மாணிக்கம் தாகூர், ”பெருந்தலைவர் காமராஜர் என்பவர் ஒரே ஒருவர்தான், அவரைப் போல் யாரும் வர முடியாது. ’இரண்டாம் காமராஜர்’ மற்றும் ’இளம் காமராஜர்’ என யாரையும் கூற முடியாது. எனவே மிகைப்படுத்தி பெருந்தலைவருடன் ஒப்பிட்டு நடிகர் விஜய் உட்பட யாரையும் பேசுவது என்பது சரியாக இருக்காது.  

மாணிக்கம் தாகூர்

எந்த ஒரு மாநிலத்திலும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் வரும் சமயத்தில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை செய்வார்கள். ஆனால் பாஜகவுக்கு மட்டுமே தேர்தலில் தோல்வி அடையும் மாநிலங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை தான் அவர்களுக்கு பூத் கமிட்டி உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள்.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"தனது கலைத்திறமையால் மகிழ்வித்து வந்த சுந்தர்.சி இனி மக்களுக்கு சேவை ஆற்றுவார்"- வாழ்த்திய குஷ்பு

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி...

நாமக்கல்: `தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும்'- தங்கமணிக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி

நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி...

மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் 'இயக்குநர்' சுந்தர்.சி – புதிய நீதிக் கட்சி அறிவிப்பு

புதிய நீதிக் கட்சி சார்பாக வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களமிறங்குகிறார்...

நெதன்யாகு மீது கடும் கோபத்தில் ஜே.டி.வான்ஸ்: பின்னணியில் ஈரான் போர் – என்ன நடந்தது?

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து இரண்டு தகவல்கள் பரவலாக இருந்து வருகின்றன.ஒன்று,...