14
March, 2026

A News 365Times Venture

14
Saturday
March, 2026

A News 365Times Venture

திருச்சி: "திமுக-விற்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம்!" – பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்

Date:

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி விவசாயிகளுக்கு எதிராகவேதான் கடந்த 5 ஆண்டுகளாக உள்ளது. தி.மு.க, விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. வருகிற தேர்தலில் தி.மு.க-விற்கு வாக்களிப்பதை விரும்பவில்லை. தி.மு.க-விற்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம். 38 கோரிக்கைகள் எந்த அரசியல் கட்சி ஏற்றுக் கொள்கிறதோ, அது குறித்து அலசி ஆராய்ந்த பின்பு முடிவெடுக்கப்படும். வரும் மார்ச் 31- ம் தேதி திருச்சியில் மாநாடு நடத்துவது என முடிவெடுத்துள்ளோம்.

pr pandiyan

அந்த மாநாட்டில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும். தி.மு.க மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். விவசாயிகளுக்கு தி.மு.க அரசு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. தி.மு.க அரசு விவசாய விரோத சட்டம் கொண்டு வந்துள்ளது. விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டு உள்ளது. எனவே, வரும் சட்ட மன்ற தேர்தலில் விவசாயிகள் தி.மு.க-விற்கு வாக்களிக்க மாட்டோம். தமிழகத்தில் 60-க்கும் மேற்பட்ட விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். எந்த கட்சி விவசாயிகளுக்கு நம்பிக்கையாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அந்த கட்சிக்கு ஆதரவு தர தயங்க மாட்டோம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

இறுதியான என்.ஆர் – பாஜக கூட்டணி; தவெக-வுக்கு வலை வீசும் ரங்கசாமி! – புதுவையில் விசிலடிப்பாரா விஜய்?

புதுச்சேரி, தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு இன்றே...

“உளவுத் துறையைக் கையாளப் போகும் முதல் பெண் டி.ஜி.பி”- அதிரடி மாற்றங்களைக் கையில் எடுத்த அரசு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடந்துவந்த குற்றசெயல்களும், அதை தொடர்ந்து...

"தேர்தலில் போட்டியிடும்படி மோடியின் பிரதிநிதி என்னை சந்தித்தார்" – எம்.பி ஆக ஆசைப்படும் ஐ.எம்.விஜயன்

கேரளாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவைச் சேர்ந்த இந்தியக்...

“கூட்டணிக்காக நாங்கள் யாரையும் எதிர்பார்த்து இல்லை" – அண்ணாமலை அதிரடி

கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்...