19
March, 2026

A News 365Times Venture

19
Thursday
March, 2026

A News 365Times Venture

“திமுக-வினர் வேண்டுகோள் விடுத்தார்களே தவிர கட்டளையிடவில்லை.!' – இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்

Date:

நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இந்திய கம்யூனிஸ்ட்- திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்தவகையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குறிக்கோள் என்பது..!

திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், “ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

திமுக கூட்டணி கட்சிகளை எப்போதும் மிரட்டியது இல்லை. பிரபல தலைவர்களையோ, நடிகர்களையோ மிரட்டிய வரலாறு இல்லை. எனவே ரஜினி காந்தை திமுக மிரட்டியது என்று சொல்வது ஏற்புடையது அல்ல.

இந்திய கம்யூனிஸ்ட்- திமுக தொகுதி பங்கீடு ஒப்பந்தம்

பாஜக தான் கூட்டணி கட்சிகளை மிரட்டி கூட்டணிக்குள் சேர்க்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பெண் நடிகை குறித்து பேசியது பண்பல்ல, கண்ணியம் அல்ல. இதனை முதலில் நாங்கள் கண்டிக்கிறோம்.

இன்று முதல்வரை சந்தித்து பேசினோம். இது சாதாரண தேர்தல் அல்ல. பாஜக அமைதியான தமிழக மண்ணை சீர்குழைக்கத் துடிக்கிறது. எனவே இந்தத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குறிக்கோள் என்பது பாஜகவையும், அதன் கூட்டணியையும் வீழ்த்துவது தான்.

கம்யூனிஸ்ட்கள் தங்களது உரிமைகளை, அரசியல் கடமைகளைக் கடந்து சென்றது இல்லை. அந்தவகையில் சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் இடம் வேண்டும் என்று நாங்கள் கூற காரணம் உழைக்கும் மக்களின் குரல் அங்கு ஒலிக்க வேண்டும். திமுகவுடன் மூன்று கட்ட பேச்சுவர்த்தைகளை நாங்கள் நடத்தினோம். கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்டோம்.

அதைவிட கூடுதல் தொகுதியை நாங்கள் கேட்டோம். ஆனால் பல்வேறு கட்சிகள் இணைந்திருக்கின்ற காரணத்தினால் குறைத்துகொண்டோம். முதல்வர் ஒத்துழையுங்கள் என்று கேட்டுகொண்டார். அதற்கு இணங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறோம்.

இந்திய கம்யூனிஸ்ட்- திமுக தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
இந்திய கம்யூனிஸ்ட்- திமுக தொகுதி பங்கீடு ஒப்பந்தம்

5, 6 இடங்கள் என்ற எண்ணிக்கை கட்சியை சோர்வடைய செய்யும். ஆனால் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதால் எங்களுக்கான இடங்களைக் கூட குறைத்துக்கொள்கிறோம். அதற்காவே நாங்கள் அணி சேர்ந்திருக்கிறோம். அதற்கான கையெழுத்து தான் இது. எங்களிடம் திமுக ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்களே தவிர கட்டளையிடவில்லை” என்று கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"திருப்பரங்குன்ற வழக்கை விசாரிக்கத் தடை இருந்தால் அதை நான் மதிப்பேன்" – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

‘திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம்’ என நீதிமன்றம் உத்தரவிட்டும் அதற்குப் போதிய ஏற்பாடுகள்...

நேபாளத்தின் புதிய விடியல்: இளைஞர் கைகளில் ஒரு தேசத்தின் கனவு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது....

முட்டுகட்டை போட்ட சிபிஎம்; கறார் காட்டிய திமுக – '5' சீட்டுக்கு இறங்கி வந்த இந்திய கம்யூனிஸ்ட்!

தி.மு.க கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர்...

கார்ட்டூன்..!

Source link