29
March, 2026

A News 365Times Venture

29
Sunday
March, 2026

A News 365Times Venture

திமுக தேர்தல் அறிக்கை: 'TV, Fridgeக்கு ரூ. 8000 மதிப்பிலான கூப்பன், 10 லட்சம் வீடுகள்'- முழு லிஸ்ட்

Date:

திமுக வருகிற சட்டமன்றத் தேர்தலில் 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நேற்று, போட்டியிடப் போகும் அக்கட்சியின் வேட்பாளர்களை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

DMK MK Stalin

மகளின் உரிமை தொகையை ரூபாய் 1000-ல் இருந்து 2000 ரூபாயாக உயர்த்துவதாக முன்பே முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். தேர்தல் அறிக்கையில், திமுக வேறு என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்.

திமுக தேர்தல் அறிக்கைகள்:

1. 15 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், 8-ம் வகுப்பு வரை முதலைமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

2. 1000 ரூபாய் உரிமைத் தொகை, 2000 ரூபாயாக உயர்த்தப்படும்.

3. இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்புசெட்டுகள் வழங்கப்படும்.

4. அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

5. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான, ஆண்டு வருமான வரம்பு 5 லட்சமாகவும், காப்பீட்டுத் தொகை 10 லட்சமாகவும் உயர்த்தப்படும்.

MK Stalin
MK Stalin

6. புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் படி மாதந்தோறும் வழங்கப்படும் ரூபாய் 1000-ல் இருந்து, 1500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

7. நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 3500-ஆகவும், கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றிற்கு 4500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

8. பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தப்படும்.

9. முதியோர் உதவித்தொகை ரூபாய் 2000-ஆகவும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூபாய் 2500-ஆக உயர்த்தப்படும்.

10. மீன்படி தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை ரூபாய் 12 ஆயிரமாகவும், மீன்பிடி குறைவுகால சிறப்பு நிவாரணத் தொகை ரூபாய் 9 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.

11. பன்னாட்டுத் தமிழ் அறிஞர்களையும், மொழி வல்லுநர்களையும் கொண்டு சென்னையில் ‘செம்மொழி மாநாடு’ நடத்தப்படும்.

12. ஒன்றிய – மாநில உறவுகள் குறித்து ஆராய தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதியரசன் சூரியன் ஜோசப் தலைமையிலான அறிக்கையை நாடு முழுவதுவதும் பேசுபொருளாக்கி மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டும் அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்வோம்.

13. சுய உதவிக் குழு உறுப்பினராக இருக்கும் பெண்கள், தொழில் முனைவோராக முன்னேறிடும் வகையில் பிணை ஏதுமின்றி, ரூபாய் 5 லட்சம் வரை மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும்.

14. பேரிடர் கால இழப்பீடுகள் ஹெக்டேர் ஒன்றுக்கு – இறவைப் பாசனப் பயிர்கள் மற்றும் நெல் பயிர்கள் – ரூபாய் 25,000 ஆகவும், நீண்டகாலப் பயிர்கள் – ரூபாய் 27,000 ஆகவும், மானாவாரிப் பயிர்கள் – 12, 000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

15. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்காக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வுதியத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படும்.

DMK Election Manifesto
DMK Election Manifesto

16. எட்டாவது ஊதியக் குழு அறிக்கையை ஒன்றிய அரசு செயல்படுத்தியது, அதனை மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் செயல்படுத்த குழு அமைக்கப்படும்.

17. அரசு அமைப்புகளில் ஏற்படும் 1.5 லட்ச காலிப் பணியிடங்கள் காலதாமதமின்றி நிரப்பப்படும். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள் உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை.

18. ஐந்து ஆண்டுகளில் உயர்கல்வி பயிலும் 35 லட்ச மாணவர்களுக்கும் மடிக்கணினி.

19. உயர்கல்வி முடித்த 5 லட்ச இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் வகையில் நான் முதல்வன் திட்டத்தில் ரூபாய் 1500 மாத உதவித்தொகையுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படும்.

20. புதிதாக 2 லட்ச புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், 2030-ம் ஆண்டிற்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்காங்கள், நகரங்களில் தேவைப்படும் இடங்களில் முழு அளவிலான தொழில்நுட்ப பூங்காங்கள் அமைக்கப்படும்.

21. ரூபாய் 18 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு அதன்மூலம் 50 லட்ச இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். தமிழ்நாட்டின் ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்ந்து, உலக வணிக வரைப்படத்தில் தமிழ்நாடு இடம்பெறும்.

22. தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 2.5 லட்ச கோடி ரூபாயிலிருந்து 5 லட்ச கோடி ரூபாயாக இரண்டு மடங்கு ஆக்கப்படும்.

23. 5000 கோவிகளுக்கு குடமுழுக்கு, ஆயிரம் கிராம தெய்வத் கோவில்களுக்கு மறுசீரமைப்பு.

24. சிறுபான்மையினர் தொழில் தொடங்க TAMCO மூலம் கடன்பெறும் உச்சவரம்பின் அளவு ரூ. 30 லட்சமாக உயர்த்தப்படும்தப்படும்.

DMK Election Manifesto
DMK Election Manifesto

25. அனைத்து மாவட்டங்களிலும் உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய தரம் வாய்ந்த விளையாட்டு விடுதிகள் கட்டப்படும்.

26. அனைத்து மாநகராட்சிகள் மற்றும் முக்கிய நகராட்சிகளில் 50 புதிய செம்மொழி பூங்காங்கள் அமைக்கப்படும்.

27. தாயுமானவர் திட்டத்தில், மிகவும் வறுமையில் வாடும் நலிவடைந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வீட்டு வசதி, சமூகப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், திறன் மேம்பாடு, வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கிடைக்க நடவடிக்கை.

28. முதலமைச்சரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் கி.மீ நீளமுள்ள சாலைகள் ரூபாய் 10,000 கோடி மதிப்பீட்டில் சீர்செய்யப்படும்.

29. திருச்சி, மதுரை, கோவை, சேலம் மாநகராட்சிகளின் அருகாமையில் நவீன வசதிகளுடன் புதிய நகரங்கள் உருவாக்கப்படும்.

30. அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 புதிய பேருந்துகள் இயக்கப்படும்.

31. ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை உயர்த்தப்படும்.

32. நிகர சாகுபடி பரப்பு 50 லட்ச ஹெக்டேராக உயர்த்தப்படும்.

33. பெண்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்கும் பொருட்டு 1000 குழந்தைகள் காப்பகங்கள் உருவாக்கப்படும்.

33. பல்வேறு துறைகளில் சிறப்புப் பணியாற்றும் திருநர் – திருநங்கைகளுக்கு விருது.

34. ஆதிதிராவிடர் & பழங்குடி மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தம் இல்லா நிலை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

35. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் தொழில் தொடங்க TABCEDCO மூலம் கடன் பெறும் உச்சவரம்பு 30 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும்.

DMK Election Manifesto
DMK Election Manifesto

36. கடலூர், தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, இராமநாதபுரம், சேலம். திருப்பூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சைகான வசதிகள் ஏற்படுத்தப்படும்.

37. பத்திரிகையாளர்களின் குழந்தைகளின் கல்விக்காக வழங்கப்படும் பல்வேறு உதவித்தொகைகள் அனைத்தும் இருமடங்காக உயர்த்தப்படும்.

38. தமிழ்நாட்டில் 10 கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்.

39. கிராமப்புறங்களின் ஆதரங்களைக் கொண்டு ஊரகப்பகுதிகளில் 5000 புத்தொழிகள் தொடங்கப்படும்.

40. அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் வை -ஃபை வசதியுடன் கூடிய டிஜிட்டல் கற்றல் மையங்கள் அமைக்கப்படும்.

41. அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்படும்.

42. 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பனை பயன்படுத்தி வாஷிங் மெஷின், டி.வி, ஃப்ரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக் கொள்ளலாம்.

அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு மாற்றாக வாங்க இல்லத்தரசி என்கிற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தவெக: நீண்ட கால பணியாளரின் மகனை வேட்பாளராக்கிய விஜய்! – பின்னணி என்ன?

தவெகவின் வேட்பாளர் பட்டியலை இன்று விஜய் வெளியிட்டுள்ளார். சென்னை விருகம்பாக்கம் தொகுதியில்...

'விஜய் அறிவித்த 234 வேட்பாளர்கள்!' – முழு பட்டியல் இங்கே!

தவெக தலைவர் விஜய் அறிவித்த 234 வேட்பாளர்களின் பட்டியல் இங்கே. 1....

"விஜய் தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள இப்படிச் செய்கிறார்'' – எல்.முருகன் சொல்வது என்ன?

தேசிய ஜனநாயக் கூட்டணியில் பழநி தொகுதியை பா.ஜ.க-விற்கு ஒதுக்காததைக் கண்டித்து பா.ஜ.க...

No Kings: அமெரிக்கா, ஐரோப்பாவில் வெடித்த போராட்டம்; அதிபர் ட்ரம்ப்க்கு எதிராகக் குவியும் மக்கள்!

ஈரான் மீதான போர் நடவடிக்கைக்கும் மற்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் செயல்பாடுகளுக்கும்...