28
March, 2026

A News 365Times Venture

28
Saturday
March, 2026

A News 365Times Venture

"தனது கலைத்திறமையால் மகிழ்வித்து வந்த சுந்தர்.சி இனி மக்களுக்கு சேவை ஆற்றுவார்"- வாழ்த்திய குஷ்பு

Date:

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி சார்பில் மதுரை மத்தி தொகுதியில் இயக்குநர் சுந்தர் சி போட்டியிட இருக்கிறார்.

இந்நிலையில் சுந்தர் சி யை வாழ்த்தி நடிகையும், தமிழக பாஜக துணைத் தலைவருமான குஷ்பு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “சுந்தர் சி தனது அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார்!

சுந்தர் சி

இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி, புதிய நீதிக் கட்சி சார்பில் மதுரை தொகுதியில் வேட்பாளராகக் களம் இறங்குகிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக, அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார்.

மறைந்த அவரது தந்தை திரு. சிதம்பரம் பிள்ளை அவர்களின் ஆசியுடனும், 94 வயதாகும் அவரது தாயார் திருமதி. தெய்வானை சிதம்பரம் பிள்ளை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் நல்வாழ்த்துகளுடனும் இந்தப் பயணத்தை அவர் தொடங்குகிறார்.

திரு. ஏ.சி. சண்முகம் அவர்களின் வழிகாட்டுதலில், கழகப் பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆதரவோடு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணன் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்துத் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு, இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று எப்போதும் போல மக்களின் மனிதனாக இருப்பார்.

குஷ்பு
குஷ்பு

கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டு மக்களைத் தனது கலைத்திறமையால் மகிழ்வித்து வரும் அவர், தன்னை உருவாக்கிய மக்களுக்குத் தனது சிறந்த சேவையை ஆற்றுவார் என்பதில், அவரது மனைவி என்ற முறையில் நான் பெருமிதம் கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"இதற்குப் பெயர்தான் சீட் பங்கீடா?" – கடிந்துக்கொண்ட பி.எல்.சந்தோஷ் ; கப்சிப் நயினார்

அ.தி.மு.க தலைமையிலான தே.ஜ கூட்டணியில், பா.ஜ.க-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி...

'மாற்றுக் கட்சி சீனியர்கள்..' ஸ்டாலின், உதயநிதிக்கு எதிராக விஜய் டிக் அடித்திருக்கும் அந்த இருவர்!

திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. 164 வேட்பாளர்கள் திமுக சார்பில்...

அண்ணாவுக்கு பிறகு… நெடுஞ்செழியனை முந்தி கருணாநிதி முதல்வராக, திமுக தலைவராக மாறிய கதை! ஆடுபுலி 11

திமுகவில் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, அதிமுகவில் திண்டுக்கல் சீனிவாசன்,...

கோவைக்கு மாறிய செந்தில் பாலாஜி; அமைச்சருக்கு இடம் இல்லை! – வெளியானது திமுக வேட்பாளர் பட்டியல்!

தமிழக சட்டபேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது....