14
March, 2025

A News 365Times Venture

14
Friday
March, 2025

A News 365Times Venture

'சீமான் சொன்னதை நம்பி ஏராளமான பணம் கொடுத்து ஏமாந்தோம்' – கொளத்தூர் மணி வேதனை

Date:

திராவிடர் விடுதலை கழகம்  தலைவர் கொளத்தூர் மணி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ” ஈழப் போராட்டம் ஆயுத போராட்டமாக மாறியபோது, அந்த போராளி குழுக்களுக்கு தமிழகத்தில் ஆயுதப் பயிற்சி நடைபெற்றது.

கொளத்தூர் மணி

அந்தப் பயிற்சிகளை திராவிட இயக்கத் தோழர்கள் ஒருங்கிணைத்தனர். காயமடைத்த புலிகளின் சிகிச்சைக்கான உதவி, ஆயுதம் அனுப்பியது வரை திராவிட இயக்கங்களின் பங்கு உள்ளது.

புலிகளுடன் இருந்ததை திராவிட இயக்கத்தினர் யாரும் விளம்பரபடுத்தவில்லை. சீமானுக்கு அரசியல் பொருளாதாரக் காரணமாக இருக்கலாம். பெரியார் என்ற திராவிட இயக்கத் தலைவருக்கு எதிராகப் பேசிக் கொண்டு இருப்பதால், அவருக்கு நாங்கள் எதிர் வினையாற்ற வேண்டியிருக்கிறது.

சீமான்

சீமான் ஏதோ மனநோய் வந்தவர்கள் போல பேசுகிறார். கரும்புலி என்று  சீமான் சொல்லியதை நம்பி  ஏமாந்து போனோம் என்று ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சொன்னது உண்மைதான்.

அனுராதாபுரம் தாக்குதலில் யாரும் தப்பவில்லை என்று சந்தோஷ் சொன்னார். ஆனால் சீமான் நெருக்கமானவராக இருந்ததால், அவர் சொன்னதை நம்பி தொலைந்தோம். ஏராளமான பணம் கொடுத்து ஏமாந்தோம். சீமான் பேசுவதை நம்பக் கூடியவர்களும் இருக்கின்றனர். ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக, பாஜக போட்டியிடவில்லை.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு

அதனால் ஈரோட்டில் இவ்வளவு வாக்கு வாங்கி இருக்கிறேன் என்று சொல்வதற்காக சீமான் இப்படி பேசுகிறார். ஈரோடு தேர்தல் பிரசார மேடையில் யாராவது அடிக்க மாட்டார்களா, அதை வைத்து அரசியல் செய்து வாக்கு வாங்கலாம் எனப் பார்க்கிறார்.  நாங்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TN Budget Highlights | TASMAC – செந்தில் பாலாஜிக்கு சுத்துப்போடும் ED – Imperfect Show 14.03.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை: ரூபாய்...

TN Budget 2025: 'சொன்னதைச் செய்வோம் என்பது காற்றில் போச்சு' – பட்ஜெட் குறித்து தலைமைச் செயலக சங்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம்...

'Senthil Balaji-க்கு, இனி ஒவ்வொரு நிமிடமும் ஷாக்தான்' – நெருக்கும் ED | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,டாஸ்மாக் துறையில் ரூ 1000/- கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு...