5
March, 2026

A News 365Times Venture

5
Thursday
March, 2026

A News 365Times Venture

சாத்தூர்: “வீட்டு விஷேசத்துக்கு கூப்பிடுங்க; கண்டிப்பா வந்து மொய் செய்றோம்..'' – கேகேஎஸ்எஸ்ஆர்!

Date:

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கலைஞர் கனவு இல்லத்திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கிவைத்து 127 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லத்திட்ட பணி ஆணையை வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே‌எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், “2001ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி சொந்த வீடுகள் இல்லாதவர்களுக்கு நிலம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சி

பின்னர் 2010-ம் ஆண்டு குடிசை இல்லா தமிழகம் திட்டத்தின் மூலம் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். கலைஞருக்கு பின்பு நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் தான், வீடு இல்லாத ஏழைகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை தொடங்கி வைத்து புதிதாக வீடு கட்டுவதற்கு மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கி வீடு கட்டிக் கொடுக்கிறார்.

பயனாளிகள் அனைவரும் விரைவில் வீடுகளை கட்டி முடித்து புதுமனை புகு விழாவிற்கு எங்களையும் கண்டிப்பாக அழைக்கவேண்டும். அவ்வாறு நீங்கள் அழைக்கும் போது நாங்கள் கண்டிப்பாக உங்கள் வீட்டு விசேஷத்திற்கு வந்திருந்து மொய் செய்வோம்” என பேசினார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கேரளா: ஜி.சுதாகரன் சிபிஎம் கட்சியில் இருந்து விலக முடிவா? சமாதானம் பேசும் தலைவர்கள்; பின்னணி என்ன?

கேரள அரசியலின் மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஜி.சுதாகரன், 63 ஆண்டுகளாக...

Spain: ஈரான் போரில் அமெரிக்காவிற்கு 'நோ' சொல்லும் ஒரே ஐரோப்ப நாடு – காரணமோ 'சூப்பர்'

'நாங்கள்... நாங்கள்' என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஐரோப்ப நாடுகள்...

IRIS Dena: '2-ம் உலகப்போருக்கு பின் முதன்முறை' இந்தியா வந்து திரும்பிய ஈரான் கப்பலை அழித்த அமெரிக்கா

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் வளைகுடா நாடுகளைத் தாண்டி இலங்கைக்கு அருகே...

கண்கலங்கிய துர்கா; உற்சாக ஸ்டாலின் – `இன்பன், இனியன் என தொடரும் உறவு' – அன்பில் இல்ல விழா ஹைலைட்ஸ்

தஞ்சாவூர் மஹாராஜா திருமண மஹாலில் அமைச்சர் அன்பில் மகேஸ் சகோதரி மகள்...