10
May, 2025

A News 365Times Venture

10
Saturday
May, 2025

A News 365Times Venture

`சாணம் மட்டுமல்ல… மாட்டு தோல் மற்றும் எலும்புகளையும் பயன்படுத்த வேண்டும்' – அமித் ஷா வலியுறுத்தல்

Date:

மக்கள் கிராமங்களில் இருந்து வெளியேறி நகரங்களுக்கு செல்லாமல் தடுக்கும் ஒரே வழி, பால் துறையை சிறப்பாக பராமரிப்பது மட்டும்தான் எனப் பேசியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்த துறையில் பொருளாதார சுழற்சியில் சாணத்தை விற்பனைப் பொருளாக்குவதுடன் நின்றுவிடக் கூடாது என்றும்… மாட்டின் தோல் மற்றும் எலும்புகளையும் பயன்படுத்த வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

மாட்டுப் பண்ணை

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையால் நடத்தப்பட்ட ‘பால்துறையின் நிலைத்தன்மை மற்றும் சுழற்சி’ என்ற பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்த அமித் ஷா, ‘தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம்’ மாட்டின் தோல் மற்றும் எலும்பை விற்பனைப் பொருளாக்குவதற்கான சிறிய கூட்டுறவுகளை ஒழுங்கமைக்கும் சாத்தியக்கூறுகளைத் ஆய்வு செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

Amit Shah பேச்சு

அமித் ஷா மாட்டின் தோலை சிறிய கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பதப்படுத்தி, ஷூ தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யலாம் எனவும் இது, பண்ணை வைத்திருப்பவர்களுக்கு லாபகரமானதாக இருக்கும் எனவும் பேசியுள்ளார். மேலும் மாடு வளர்ப்பில் 100% பொருளாதார சுழற்சியை கூட்டுறவு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அமித் ஷா

மாட்டு சாணத்தை இயற்கை எரிவாயுவாக மாற்றும் செயல்பாட்டில் தனியார் பண்ணைகளுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்றும், பால்துறைக்கு தேவையான அனைத்து இயந்திரங்களையும் கூட்டுறவு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும், சர்வதேச ஏற்றுமதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

அமித் ஷா, “இப்போது பண்ணை முதல் தொழிற்சாலை வரை அத்தனையையும் கிராமங்களிலேயே அமைப்பதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். விளிம்பில் உள்ள விவசாயிகளைத் தூக்கிவிடுவதற்கு கிராமத்தில் இருந்து உலக அரங்குக்கு செல்வதற்கான வரைபடத்தை உருவாக்க வேண்டும். மதிப்புக் கூட்டுவதற்காக பண்ணையில் இருந்து தொழிற்சாலைக்கு விரிவான வரைபடத்தை உருவாக்க வேண்டும். கூட்டு முயற்சிகள் மூலம் கால்நடை வளர்ப்பவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"ராணுவத் தாக்குதலுக்கான பெயரைப் பாகிஸ்தான் இதிலிருந்துதான் எடுத்திருக்கிறது" – ஓவைசி சொல்வது என்ன?

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாகப் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீத...

India – Pakistan : 'விதிகளை மீறும் பாகிஸ்தான்; வலுவாக தாக்குங்கள்!' – ராணுவத்துக்கு அரசு அறிவுரை!

'அமைதி உடன்படிக்கையை மீறும் பாகிஸ்தான்!'இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல்...

இந்திய படைகளுக்கு ஆதரவாக பேரணி நடத்திய முதல்வர் ஸ்டாலின்; நன்றி தெரிவித்த ஆளுநர் ரவி

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர்...

'ஸ்ரீநகரில் குண்டுகள் வெடிக்கும் சத்தம்; அமைதி ஒப்பந்தத்துக்கு என்ன ஆச்சு?’ – ஒமர் அப்துல்லா

'ஒமர் அப்துல்லா பதிவு!'இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் எல்லாவற்றையும் முழுமையாக...