27
March, 2026

A News 365Times Venture

27
Friday
March, 2026

A News 365Times Venture

'கூட்டம் கூடுவதற்கு ஏற்ற இடமல்ல' – விஜய்யின் பிரசாரத்துக்கு தேர்தல் அலுவலர் அனுமதி மறுத்தது ஏன்?

Date:

தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பூரிலிருந்து தனது பிரசாரத்தை தொடங்குவதாக திட்டமிட்டிருந்தார். ஆனால், விஜய்யின் பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

TVK Vijay

காவல்துறை அனுமதி வழங்காததால் அதை காரணம் காட்டி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி மறுத்திருந்தார். இதைக் கண்டித்து விஜய்யும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், விஜய் பிரசாரத்துக்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என தேர்தல் அதிகாரி தரப்பிலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது.

விஜய்யின் அனுமதி கடிதத்திற்கு காவல்துறை வழங்கியிருக்கும் பதிலில், ‘மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ள பெரம்பூர் முல்லை நகர் சந்திப்பானது சென்னை மாநகர தேர்தல் நடத்தும் அலுவலரால் எஸ் எம் நகர் 82 ஆவது பிளாக் சந்திப்பு என குறிப்பிட்டு சிறிய அளவிலான தெருமுனைப் பிரசாரம் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

TVK Vijay
TVK Vijay

மனுதாரர் மனுவில் மேற்படி முல்லை நகர் சந்திப்பில் தெருமுனை பிரசாரம் நடத்துவதற்கு பங்கு பெறுவோர்களின் எண்ணிக்கை 3000 என குறிப்பிடப்பட்டுள்ளதால் அனுமதி வழங்க பரிந்துரை செய்ய இயலாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனவே மனுதாரர் தங்களது பிரசாரம் நடத்த வேறு ஒரு இடத்தினை தேர்வு செய்து மனு அளித்தால் அனுமதி அளிப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’ எனக் கூறப்படுகிறது. இதை காரணம் காட்டிதான் தேர்தல் அலுவலர் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சூரியனில் மறையும் பம்பரம்: `இது கூட்டணி அல்ல,எங்களை அழிக்கும் திட்டம்!'- மதிமுக நிர்வாகிகள் குமுறல்

"சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகிறோம். இதுதான் எங்கள்...

சென்னை: மாணவியின் பாலியல் புகார்: அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபு கைது!

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், சென்னை போலீஸ்...

போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; 'மாஸ்டர் பிளானை' தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detail

நாளையோடு ஈரான் போர் நான்கு வாரங்களை நிறைவு செய்யப்போகிறது.'ஈரான் எங்களுடன் பேச்சுவார்த்தை...

'100 பேருடன் தெருமுனைப் பிரசாரம்…' – பிரசார அனுமதி மறுப்புக்கு பின் விஜய்யின் அடுத்த முயற்சி!

தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பூரிலிருந்து பிரசாரத்தை தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தொகுதியின்...