25
March, 2026

A News 365Times Venture

25
Wednesday
March, 2026

A News 365Times Venture

கீழடி அறிக்கையைத் திருப்பி அனுப்பிய மத்திய அரசு: "புராணங்களை வரலாறாக மாற்றும் பாஜக" -சு.வெ எதிர்ப்பு

Date:

கீழடி குறித்த ஆய்வு தொல்லியல் துறை அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளதை எதிர்த்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்.

அவர் அதில் கூறியுள்ளதாவது…

“தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக.

கீழடி எனும் வரலாற்றுத் தொல் நகரம் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை திரு. அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் ஒன்றிய தொல்லியல் துறைக்குச் சமர்பித்தார்.

ஆனால் ஒன்றிய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை வெளியிடவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பபட்ட போது, “விரைவில் வெளியிடப்படும்” என்று தொல்லியல் துறையால் உறுதி மொழி அளிக்கப்பட்டது. ஆனாலும் இப்பொழுது வரை அறிக்கை வெளியிடப்படவில்லை.

கீழடி

இந்நிலையில் வரும் 27 ஆம் தேதி நாடாளுமன்ற உறுதிமொழிக் குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என ஒன்றிய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையைத் திருப்பி அனுப்பியுள்ளது.

கீழடியின் உண்மைகளை அதிகார பூர்வமாக அறிவிக்க ஒன்றிய தொல்லியல் துறை எளிதில் முன்வராது.

“தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும்” என்றென்றும் எதிரிகள் யார் என்பதை ஒன்றிய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.

புராணங்களை வரலாறாக மாற்ற நாள்தோறும் பணியாற்றிய பாஜக அரசு, அதே வேகத்தோடு நமது வரலாற்றை மறைக்கவும் பணியாற்றி வருகிறது.

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை என்பது பாஜக அரசின் அரசாணையோடு சம்பந்தபட்டதல்ல. நிரூபிக்கப்பட்ட அறிவியலோடு சம்பந்தபட்டது!

அதனை மறைக்க அவர்களால் ஒரு போதும் முடியாது.

கீழடி தமிழர்களின் தாய்மடி என்ற உண்மையை உரக்கச்சொல்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"டார்ச் சின்னத்தில் போட்டியிட ஸ்டாலின் அனுமதிக்க வேண்டும்" – கமல்ஹாசனுக்காக குரல் கொடுக்கும் திருமா

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று...

` 13 திமுக அமைச்சர்கள், சபாநாயகர் தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள்' – எடப்பாடியின் அடடே மூவ்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர்...

'மூப்பனாரின் ஆன்மா மன்னிக்காது.!' – பாஜகவிடம் கட்சியை அடகு வைத்த ஜி.கே.வாசன்?

என்.டி.ஏ கூட்டணியில் 5 தொகுதிகளை வாங்கிக் கொண்டு பாஜக-வின் தாமரை சின்னத்தில்...

அழுத்தம் கொடுக்கும் வானதி சீனிவாசன்; அப்செட் அண்ணாமலை; கோவை வடக்கு தொகுதிக்கு உச்சகட்ட போட்டி

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், பாஜகவுக்கு கோவையில் ஒரு தொகுதி...