26
February, 2026

A News 365Times Venture

26
Thursday
February, 2026

A News 365Times Venture

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

Date:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக வெளியான தகவலில், 78 வயதாகும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, கடந்த வாரம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கெடுத்தார். அதற்குப் பிறகு அவர் வெளியே வரவில்லை. இந்த நிலையில், அவருக்கு வயிற்றுப் பிரச்னை இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், அவர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சோனியா காந்தி

நேற்று காலை 8:30 மணிக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பரிசோதனை முடிந்த பின்னர் இன்று வீடு திரும்புவார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சோனியா காந்தி பெரியதாக பொது வெளியில், அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. காங்கிரஸ் கட்சியை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான அரசியல் வியூகங்களை வகுப்பதோடு நிறுத்திக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`வேலூர் தவெக: மும்மூர்த்திகளின் தேர்தல் கணக்கு' டு `பிளாக்கா வேணுமா… ஒயிட்டா வேணுமா?' | கழுகார்

தவிக்கும் 'பெல்' மாஜி!சீட்டுக்காக மல்லுக்கட்டும் உறவினர்...மான்செஸ்டர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியைக்...

`தாமிரபரணி மணல் கொள்ளையை எதிர்த்து போராடி வென்றவர் நல்லகண்ணு ஐயா' – ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள் கண்ணீர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. வயது மூப்பு காரணமாக...

Dhawan: முதல் மனைவி தொடர்ந்த வழக்கு.! `ஏமாற்றிப் பெற்ற சொத்து' – சட்டப் போராட்டத்தில் தவான் வெற்றி

2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான ஷிகார் தவான், ஆகஸ்ட் 2024-ல்...