2
March, 2026

A News 365Times Venture

2
Monday
March, 2026

A News 365Times Venture

காங்கிரஸ் கட்சிக்கு `கவுண்டவுன் ஸ்டார்ட்' – கழற்றிவிடும் மூடில் தி.மு.க!

Date:

“காங்கிரஸ் கட்சிக்காக காத்திருந்தது போதும். நம் வலிமை வைத்து தேர்தலை சந்திக்கலாம்” என்று முதல்வரிடம்  மூத்த அமைச்சர்கள் சிலர் ஆலோசனை சொல்லியுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியும் தங்களது கடைசி கட்ட நகர்வை இன்று இரவுக்குள் நடத்திவிட உள்ளது. இதனால், தமிழக தேர்தல் கூட்டணி கணக்கு இரண்டு தினங்களுக்குள் முடிவுக்கு வர உள்ளது என்கிறார்கள்.
தி.மு.க-வின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் கடந்த சனிக்கிழமை அன்று முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்த காங்கிரஸ் கட்சி, தாங்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் தொகுதிகளை தர தி.மு.க மறுத்துவருவதால் கூட்டணி பேச்சுவார்த்தை இனியும் நடக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தி.மு.க பெரிதும் நம்பி வந்த டெல்லி தலைமையும் தி.மு.க கூட்டணி குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய இருப்பதாக வெளியாகும் தகவலால், காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி முடியும் தருவாயில் வந்துவிட்டது என்கிறார்கள்.

திமுக – காங்கிரஸ்

தி.மு.க தரப்பில் நாம் விசாரித்தபோது, “ காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கியது போலவே இப்போது 25 இடங்களை கொடுக்க தி.மு.க திட்டமிட்டது. அவர்கள் ஆரம்பத்திலிருந்து 39 தொகுதிகளுக்கு குறைவான இடங்களை பெற முடியாது என்பதில் உறுதியாக உள்ளார்கள்.

2011 மற்றும் 2016-ம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை தி.மு.க விட்டுக்கொடுத்தது. காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் கொத்தாக அ.தி.மு.க வெற்றிபெற்றது. அதனால் தான் 2021-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளை குறைத்து வெற்றி பெறும் தொகுதிகளை மட்டும் அவர்களுக்கு வழங்கினோம்.

இந்த முறையும் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகளையே தி.மு.க வழங்க முன்வருகிறது. ஆனால் எண்ணிக்கையை மட்டும் அவர்கள் பிரதானமாக பார்க்கிறார்கள். கூடுதல் இடங்களை வாங்கி தோற்றால் பாதகம் அவர்களுக்கு இல்லை, எங்களுக்கே. அதை காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுவிடம் நாங்கள் தெளிவாக விளக்கிவிட்டோம்.

கூட்டணி கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. மாறாக தி.மு.கவின் ஒற்றைக்கட்சி ஆளுமை மீதே அவர்களுக்கு கடுப்பு இருப்பது தெரிகிறது. குறிப்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடாங்கர், தி.மு.க தலைமை மீது கடும் வன்மத்தில் இருக்கிறார். இந்த கூட்டணி இப்போது ஒட்டாமல் போவதற்கு அவரும் ஒரு காரணம்.

கிரிஷ் சோடங்கர்
கிரிஷ் சோடங்கர்

த.வெ.க தரப்பில் சிலர் அவருடன் தொடர்பில் இருப்பதால், த.வெ.க ஆதரவு மனநிலையில் அவர் உள்ளார். அவரது பேச்சைதான் டெல்லி காங்கிரஸ் தலைமையும் கேட்பதாகவே எங்களுக்கு தோணுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக தலைவர் வைத்துள்ளார். மார்ச் 3-ம் தேதிக்குள் அவர்கள் கூட்டணி விசயத்தில் ஒரு முடிவை எடுக்காவிட்டால், அந்த இடத்தில் தி.மு.க வேட்பாளரை அறிவிக்க தலைமை ரெடியாகிவிட்டது.

காங்கிரஸ் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் மனநிலைக்கு முதல்வரும் வந்துவிட்டார். அவர்கள் கேட்பதை எல்லாம் கொடுத்தால் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் அதே பாணியை பின்பற்றும். காங்கிரஸ் கட்சியை தவிற பிற கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கையில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை” என்கிறார்கள்.

காங்கிரஸ் தரப்பில் விசாரித்த போது, “மார்ச் 3 தேதிக்குள் டெல்லி தலைமையே கூட்டணி குறித்த முடிவை அறிவிக்க உள்ளது. இப்போதைய நிலையில் த.வெ.க-வுடன் காங்கிரஸ் கூட்டணிக்கு செல்லவே அதிகமான வாய்ப்பு உள்ளது. டெல்லியில் சனிக்கிழமை அன்று முக்கிய ஆலோசனை ஒன்று நடந்தது. இந்த ஆலோசனைக்கு பிறகே காங்கிரஸ் கட்சியின் தலைமை த.வெ.கவுடன் நெருக்கத்தை காட்டும் மூடில் உள்ளது.

அதேநேரம் தமிழக காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் பலரும் டெல்லி தலைமையிடம் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இது மட்டுமே இப்போது காங்கிரஸ் கட்சிக்கு உள்ள சிக்கலாக பார்க்கப்படுகிறது. மேலும், தமிழக காங்கிரஸ் தலைவரும் தி.மு.க வுடன் கூட்டணி வைக்கவே விரும்புகிறார். இந்த குழப்பத்தினால் கூட்டணி குறித்த முடிவை அறிவிக்காமல் காங்கிரஸ் தரப்பு அமைதிகாத்துள்ளது.

அறிவாலயத்தில் காங்கிரஸ் குழு
அறிவாலயத்தில் காங்கிரஸ் குழு

தி.மு.க சொல்வது போல மார்ச் 3-ம் தேதிக்குள் கூட்டணி விசயத்தில் முக்கிய அறிவிப்பை டெல்லி தலைமை அறிவித்துவிடும். த.வெ.கவுடன் கூட்டணி வைத்தால் ஐம்பது தொகுதிகள் வரை கிடைக்கும் என்கிற நிலை இருப்பதால் அதற்கான வாய்ப்பே இப்போது பலமாக உள்ளது. ஒரு வேளை தி.மு.க தலைமை நேரடியாக சோனியாவிடம் பேசினால், இந்த கூட்டணி நீடிக்க வாய்ப்புள்ளது. கடைசி கட்ட கவுன்டவுனில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணியில் நடந்துவருகிறது.” என்கிறார்கள்.
கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறினால் என்னவிதமான பாதிப்பு தங்களுக்கு வரும் என்கிற ஆய்வையும் தி.மு.க எடுத்துள்ளது. சிறுபான்மையினர் மற்றும் தலித் வாக்குகளை ஒருங்கிணைத்தாலே காங்கிரஸ் கட்சியின் இடத்தை நிரப்பிவிடலாம் என்று மூத்த அமைச்சர்கள் ஆலோசனை சொல்லியுள்ளார்கள். இதனால் தங்கள் அணியில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் தலித் அரசியல் இயக்கங்களுக்கு கூடுதல் முக்கியத்துவத்தை வழங்க தி.மு.க முடிவெடுத்துள்ளது.!

அரசியல் ஆட்டம் ஸ்டார்ட்.!

Loading…

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

DMK : 'பௌர்ணமி தினத்தில் அறிவாலயத்தில் கூடிய அமைச்சர்கள்; போக்குவரத்து நெருக்கடியில் அண்ணா சாலை!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விநியோகம் ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. பெளர்ணமி...

படுவைரலான சவால்; கே.சி.வீரமணியால் பின்வாங்கும் தேவராஜி; பிடிகொடுக்காத எ.வ.வேலு- ஜோலார்பேட்டை சடுகுடு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் தி.மு.க மாவட்டச் செயலாளரான க.தேவராஜி, சிட்டிங்...

ஈரான் : காமேனி மரணம் – மௌனம் காக்கும் இந்தியா | காரணம் என்ன?

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின்...

நெருங்கும் டெட்லைன்; காத்திருக்கும் விஜய்; இழுத்தடிக்கும் காங்கிரஸ்! – என்ன செய்யப் போகிறது திமுக?

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் இழுபறி இன்னும் முடிவுக்கு வரவில்லை....