27
February, 2026

A News 365Times Venture

27
Friday
February, 2026

A News 365Times Venture

`காங்கிரஸின் 48 மணிநேரம்' ; மாறியதா ராகுல் மனநிலை? – மாற்று திட்டத்துடன் தி.மு.க!

Date:

“எந்தக் கட்சி அதிகாரத்தை வேண்டாம் என்று சொல்லும்? நாங்கள் ஒரு அரசு சாரா நிறுவனத்தை நடத்தவில்லை, ஒரு அரசியல் கட்சியை நடத்துகிறோம். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதன் சொந்த விருப்பங்கள் உள்ளன. த.வெ.க – எங்களை கூட்டணி பேச்சுவார்த்தை அழைத்தது” என்று காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சொன்ன கருத்து தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறும் முடிவை எடுத்துவிட்டதாகவே சொல்கிறார்கள். 

காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று சத்திய மூர்த்தி பவனில் நடந்த ஜூம் மீட்டிங்கிற்கு பிறகு, `தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் தொடருவது இனி கடினம். அதற்கான அறிகுறிகள் காங்கிரஸ் கட்சிக்குள் தெரிய துவங்கிவிட்டது’ என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர் காங்கிரஸ்காரர்கள். நம்மிடம் பேசிய மூத்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், “இத்தனை முறை காட்டாத கடும் நெருக்கடியை தி.மு.க-வுக்கு காங்கிரஸ் கட்சி இந்த முறை காட்டியுள்ளது. குறிப்பாக தி.மு.க-விடம் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்டது அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று.

கிரிஷ் சோடங்கர்

மற்றொரு புறம் காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு டீம், `த.வெ.கவுடன் கூட்டணி அமைக்க வேண்டும். அதனால் கூடுதலான இடங்களில் காங்கிரஸ் போட்டியிடலாம்’ என்று டெல்லி மேலிடத்திற்கு ஐடியா கொடுக்க, ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியை வைத்து பரிசோதனை மேற்கொண்டு வரும் ராகுலின் கவனம் தமிழகத்தின் மீது விழுந்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டியை வைத்து புதிய கூட்டணியை கட்டமைக்கும் நினைக்கிறார் ராகுல். அதற்கு த.வெ.க வாய்ப்பாக அமைந்துவிட்டது” என்கிறார்கள். 

காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கும் அனைத்து நிபந்தனைகளையும் த.வெ.க செய்து கொடுக்க தயாராக இருக்கிறது. தி.மு.க தரப்பு கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த தொகுதிகளின் எண்ணிக்கையை தவிர கூடுதலாக கொடுப்பது கடினம் என்கிற முடிவை தலைமை எடுத்துள்ளது. கனிமொழியை காங்கிரஸ் பொறுப்பாளர் கிரஷ் சோடங்கர் சந்தித்த போது இது தான் பிரதான விசயமாக பேசப்பட்டது. 

மற்றொருபுறம் முதல்வரை சந்தித்துவிட்டு டெல்லி சென்று வேணுகோபாலும், “தி.மு.க சீட் விசயத்தில் இறங்கிவருவது போல தெரியவில்லை. அவர்கள் நாம் இருந்தால் இருக்கட்டும். இல்லையென்றால் போகட்டும்” என்கிற மூடில் இருக்கிறார்கள் என்று சொன்னதை தொடர்ந்து ராகுல் மனநிலை முற்றிலும் மாறிவிட்டது. சோனியாவின் கடைசி முடிவுக்காகவே காங்கிரஸ் கட்சி காத்துள்ளது. சோனியா ஒப்புதல் தந்தால் அடுத்த இருபத்தி நான்கு மணிநேரத்தில் தமிழகத்தின் கூட்டணி விவகாரத்தில் புதிய அறிவிப்பு வந்துவிடும் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். 

ஸ்டாலின்

தி.மு.க தரப்பில் காங்கிரஸ் கூட்டணி குறித்து கேட்டால், “காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களுக்கு மேல் கொடுக்க தி.மு.க தலைமை விரும்பவில்லை. ஏற்கனவே ஒரு ராஜ்ய சபாவுக்கு கூட ஒப்புக்கொண்டோம். ஆனால் இனி ராஜ்ய சபாவும் கிடையாது என்கிற மூடுக்கு முதல்வர் வந்துள்ளார். இத்தனை வருடம் நாங்கள் நம்பிக்கையான கூட்டணிகாக இருக்கும் போது, எங்களுக்கே கெடு வைத்து ஆழம்பார்த்தால்  நாங்கள் சும்மாஇருப்போமா?” என்கிறார்கள்.

நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்குள் காங்கிரஸ் யார் பக்கம் இருப்பது என்கிற முடிவை எடுக்க உள்ளார்கள். இன்றைய நிலையில் த.வெ.க பக்கம் காங்கிரஸ் கட்சி செல்லும் வாய்ப்பும் இருப்பதால் “போனால் போகட்டும்” என்று மாற்று திட்டத்தையும் தி.மு.க-கையில் எடுத்துள்ளது. ஒருவேளை தி.மு.கவுடன் கூட்டணியை ஒப்புக்கொண்டால், இந்த வாரத்திற்குள் தொகுதியை இறுதி செய்யவும் தி.மு.க தரப்பு முடிவெடுத்துள்ளது.

இதனால், திமுக காங்கிரஸ் தரப்பில் அடுத்த இரு நாள்களுக்கு அரசியல் அனல் தகிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.!

Loading…

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`இஸ்ரேல் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட அதே நாளில்தான் நான் பிறந்தேன்.!' – பிரதமர் மோடி

இஸ்ரேலுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி,...

மும்பை: ரூ.80,000 கோடிக்கு மாநகராட்சி பட்ஜெட்; வரவைவிட செலவு அதிகம்; என்ன செய்யப்போகிறது அரசு?

இந்தியாவிலேயே மிகவும் பணக்கார மாநகராட்சியாக மும்பை மாநகராட்சி விளங்குகிறது. மும்பை முழுவதும்...

நல்லகண்ணு: "அவரைப் பார்த்துத்தான் நான் அதைச் செய்தேன்; அதுவே என் வீர வணக்கம்" – நடிகர் பார்த்திபன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று பிற்பகல் உடல்நலக்குறைவால்...