10
April, 2026

A News 365Times Venture

10
Friday
April, 2026

A News 365Times Venture

"கத்திக் கத்தியே செத்துப்போ'ன்னு என்னை சபிச்சிட்டாங்க, சுடுகாட்டுல பேசியிருந்தாக்கூட..!"- சீமான்

Date:

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “கூட்டங்களில் கத்திக் கத்தியே செத்துப்போ என்று என்னை மக்கள் சபித்துவிட்டார்கள்” என ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (ஏப்ரல்.8) பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது பேசிய அவர், “மலையாள நடிகர் மம்முட்டியிடம், ஏன் நீங்கள் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை? என்று சிலர் கேட்டிருக்கிறார்கள்.

சீமான்

அதற்கு அவர், “எங்கள் மக்கள் தங்கள் தலைவர்களை திரையரங்குகளில் தேடுவதில்லை” என்று பதிலளித்திருக்கிறார்.

ஆனால் இங்கு மக்கள் திரையரங்குகளைத் தவிர வேறு எங்கும் தலைவர்களை தேடுவதில்லை.

முன்பு திரையரங்கில் படம் பார்க்கும்போது விசிலடித்தீர்கள். இப்போது தெருவில் விசிலடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

கூட்டங்களில் இப்படியே கத்திக் கத்தியே பேசி செத்துப்போ என என்னை சபித்துவிட்டனர்.

மக்களை ஏமாற்றுவது எளிது. ஆனால் மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்துவது கடினம்.

நானும் 15 ஆண்டுகளாக கத்திக் கத்திப் பேசி பார்த்து விட்டேன். உங்கள் காதில் விழமாட்டிங்கிறது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
சீமான்

சுடுகாட்டில்போய் பேசியிருந்தால் கூட பாவம் பார்த்து நான்கு பிணமாவது எழுந்து வந்திருக்கும்.

இந்த முறையாவது மானம், ரோஷம், கோபம் எல்லாம் வருகிறதா? என்று பார்ப்போம்” என்று ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"மு.க.ஸ்டாலினின் கைக்கூலி ஜி.கே.மணி; உதயநிதியின் கைக்கூலி தமிழ்குமரன்…!" – அன்புமணி ஆவேசம்

"தமிழ்குமரன் திமுகவில் சீட் பெறத்தான் ஒரு மாதத்திற்கு முன்பே முடிவு செய்திருந்தார்...."...

`என் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் கல்லுப்பட்டி ஆலமர மேடை' – நெகிழ்ந்த தங்கம் தென்னரசு

``என் மனதில் என்றும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் மேடை இந்தக் கல்லுப்பட்டி...

`எப்படி ஜெயிக்குறாங்கனு பார்த்துடுறேன்!' – தலைநகர் உள்ளடி டு சீட்டுக்கு 2 ஸ்வீட் பாக்ஸ்! | கழுகார்

"வேலை பார்ப்பவர்களுக்கே மேயர் பதவி!"தஞ்சாவூர் தொகுதி தி.மு.க வேட்பாளராக, சிட்டிங் மேயர்...

'ஸ்டாலின் கொரோனால போயிடுவாருன்னு சொன்னேனா?' – எடப்பாடி பழனிசாமி விளக்கம்

தேர்தல் பிரசாரத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி...