25
March, 2026

A News 365Times Venture

25
Wednesday
March, 2026

A News 365Times Venture

'ஒவ்வொரு குடும்பத்துக்கும் விலையில்லா ஃபிரிட்ஜ்' – தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

Date:

சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார். அதிமுக தேர்தல் அறிக்கையில் 297 அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்த நிலையில், இப்போது முழுமையான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி

> மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க 25,000 ரூபாய் மானியம்.

> அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலை இல்லா ஃபிரிட்ஜ்

> ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ பருப்பு, எண்ணெய் இலவசம்

எடப்பாடி பழனிசாமி

> முன்னாள் படைவீரர் பிள்ளைகளுக்கு அரசு, கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை பயில 1 சதவிகிதம் இட ஒதுக்கீடு

> ஊரக வேலைத்திட்டம் 150 நாட்களுக்கு உயர்த்தப்படும்

> வங்கிகளில் பெற்ற கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்

> தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த மதுக்கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை

> ஜல்லிக்கட்டின்போது காயமடைந்தால் 2 லட்சம்; உயிரிழந்தால் 10 லட்சம் வழங்கப்படும்

> கோயில்களில் அன்னதானத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

> ராணுவத்தில் உயிர்நீத்த, படை வீரர் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம்

> வாழ்வாதார உதவியாக ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

> வீடு இல்லாத குடும்பங்களுக்கு ‘அம்மா இல்லம்’ திட்டத்தின் பெயரில் வீடு கட்டித்தரப்படும் என்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன

> கொத்தடிமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும்

> சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தப்படும்

> பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்திட்டத்தில் வருமான உச்சவரம்பு நீக்கப்படும்

முழுமையான தேர்தல் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை டு ஜீவிதா நாச்சியார் – சசிகலா வேட்பாளர்கள் லிஸ்ட்டில் இவர்களா?

தொகுதிப் பங்கீட்டை பிரதான கட்சிகள் ஒருவழியாக முடித்து வரும் நிலையில், தன்...

'தொடர்ந்து தோற்பவன் என கேலி செய்வது இதயத்தை நொறுக்குகிறது' மேடையில் கண்ணீர்விட்ட காங்கிரஸ் வேட்பாளர்

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயம்குளம் சட்டமன்ற தொகுதி கடந்த...

'என் மகனுக்கு இல்லை என்றால் எனக்கு..!'-கணக்கு போடும் திருநாவுக்கரசர்; கல்தா கொடுக்கிறதா கட்சி தலைமை?

அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் காலத்தில் அமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மாநில தலைவராகவும் இருந்தவர் திருநாவுக்கரசர். திருச்சி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யாக இருந்த இவருக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சீட் மறுக்கப்பட்டது. அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி தொகுதியில் இவரது மகன் எஸ்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார். அங்குள்ள தி.மு.க-வினர், 'இந்தமுறை தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டும்' என்று போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியை காங்கிரஸூக்கு ஒதுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் ஆதரவாளரான மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தீர்மானம் போட்டு, தலைமைக்கு அனுப்பியிருக்கிறார்."காங்கிரஸ் கட்சிக்கு திருச்சியில் ஏதாவது ஒரு தொகுதியை கேட்போம். ஆனால், நான் திருச்சி கிழக்கு தொகுதியை கேட்கிறேன் என்பது தவறான தகவல். நான்தான் எம்.எல்.ஏ தேர்தலில் நிற்கவில்லை என்று சொல்லிவிட்டேனே. என் மகன்தான் அறந்தாங்கி தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். பேச்சுவார்த்தை நடக்கிறது. அது முடிந்ததும், தெரியும். ஏன் அவருக்கு கிடைக்காமல் போக போகிறது?. என்னைப் பொறுத்தவரையில் நான் நிற்கவில்லை" என்றார்.திருநாவுக்கரசரின் சீட் பெறும் 'ஆடுபுலி ஆட்டம்' என்னவாக போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்! Source link

திமுக-விடம் டபுள் டிஜிட்டில் தொகுதி வாங்குகிறதா தேமுதிக?

கூட்டணியில் இழுபறியாக நீடித்து வந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என எல்லாரிடமும்...