12
March, 2026

A News 365Times Venture

12
Thursday
March, 2026

A News 365Times Venture

“ஐந்தே மாதத்தில்… எதிர்க்கட்சியினரின் எண்ணத்தை தவிடுபொடியாக்கி உள்ளோம்" – முதல்வர் ஸ்டாலின்

Date:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது தமிழ்நாட்டையே அதிரவைத்தது. பல அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்து விசாரித்துவந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு இன்று காலை தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் ஞானசேகரன் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது.

ஸ்டாலின்

இந்த தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றனர். அதே நேரம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “இந்த தீர்ப்பு வரவேற்கத் தக்கதுதான். ஆனால், இந்த வழக்கின் மிக முக்கியமான கேள்வியான யார் அந்த சார் என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஐந்தே மாதத்தில்…

அதைத் தொடர்ந்து இந்த தீர்ப்பு குறித்து தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், “சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் மாண்பமை நீதிமன்றத்துக்கும் நன்றி! காவல்துறையினரிடம் நான் தொடர்ந்து கூறுவது: “குற்றம் நடக்கக் கூடாது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது; விசாரணையைத் துரிதமாக நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும்!”.

குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி, இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம். சட்டநீதியையும் – பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`தாக்கக் கூடாது, எங்கள் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும்'- போரை முடிக்க ஈரான் விதிக்கும் 3 நிபந்தனைகள்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் 12-வது...

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? கையிருப்பு இருக்கிறதா? – தமிழக பெட்ரோலிய வணிக சங்கத் தலைவர் விளக்கம்

ஈரான் - இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர்...

புதுச்சேரி: `சிலிண்டர்கள் இல்லை’- கைவிரிக்கும் ஏஜென்சிகள்.. அச்சத்தில் மக்கள் – என்ன சொல்கிறது அரசு?

`எண்ணெய் நிறுவனங்களுடன் அரசு ஆலோசனை செய்தது...’மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான...

தேர்தல் களம்: `விஜயகாந்த் டு விஜய்' தமிழ்நாட்டில் 'மூன்றாம் அணி' வெற்றி சாத்தியமா? – ஓர் அலசல்!

தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு துருவ அரசியலைத் தாண்டி ஒரு...