25
March, 2026

A News 365Times Venture

25
Wednesday
March, 2026

A News 365Times Venture

எரியாத அடுப்புகள்- அனுபவக் கொடுமைகள்

Date:

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

ஏகாதிபத்திய அமெரிக்காவும் ஏடாகூடமாக   ஈரானும்  இஸ்ரேலும்

ஈகோ பார்த்து எதிரெதிரே மோதிக்கொள்ளும் தருணத்தில்

இடையிலே நமக்கேன் இத்துன்பம்?

இட்லி  பாதி தான்  வெந்திருக்கு குக்கரின்  விசிலும் கூப்பிடலை பாப்பாக்கு  பாலும்  கொதிக்கவில்லை பாட்டியின் காப்பிக்கு   வழியுமில்லை அடுப்புத் தீ அணைந்த மாயம் என்ன?

அதிகாரத் தீயின் கோபம் என்ன? அப்பாவி மக்கள் செய்த பாவம்என்ன? அனுபவிக்கும்‌ கொடும் சாபம் என்ன?

அடிப்படை தேவைகள்நின்றுவிட அல்லாடும் மக்கள் துவண்டு விழ இரு நாட்டுக்கான  பகை உணர்வில் இருளில்  தவிக்குமா  முழு உலகும்?

மாற்றி மாட்ட கேஸ்  உருளையில்லே ஏனென்று கேட்கவும்  துணிவுமில்லை தேற்றிக் கொள்ளவும் முடியவில்லை தேடிச்செல்லவும் வழி தெரியவில்லை

பாலுக்கு குழந்தை அழுகின்றது

பசி என்று பாலகன் தேம்புகின்றான்

வாராது  வந்த துன்பம் என்ன?

போரால்  கிடைக்கும் இன்பம் என்ன?

வண்டிக்கு பெட்ரோல்  நிரப்பிவர

வைகறை வேளையில் போனவரும் 

வரிசையில் பசியுடன் காத்திருக்க

இருப்பு முடிந்ததென வந்த குரல்

இடி எனத் தலையில் இறங்கி விட

எல்லாரும்பதறிசிதறிஓடியதில்

நெரிசலில் கணவர் வீழ்ந்தார் என

எதிர் வீட்டுக்காரர் கூட்டி  வந்தார்

ஆஸ்பத்திரி செல்ல ஆட்டோ இல்லை

வைத்தியம் பார்க்கவும் வழியில்லை

ஹோட்டலில்  உணவுஇல்லைஎன்றார்

விடுதியில்இருவேளைமட்டுமென்றார்

வீடுகளில்  எரிசக்தி  தட்டுப்பாடு

வெளியில் வாட்டுகின்ற கட்டுப்பாடு

மார்க்கெட்டில் காய்கறிகள் அழுகி வீணாகும்

விற்காத  உணவுப்பொருள் கெட்டு வீணாகும்

போக்குவரத்து நிலை  தடுமாறி விடும்

பொது ஜன வாழ்க்கைவழிமாறிவிடும்

உண்ணாத  வயிறுகள் சுருங்கிப்  புண்ணாகும்

ஏழைகளின் வாழ்வு இனி இங்கே என்னாகும்?

 போட்டா போட்டி  போட்டு இங்கே

போர் நடத்தும் நாடுகளே! இன்று

 பாமர மக்கள்படும் துன்பம்உங்கள்  

மனதில் பதிவது எப்போது?

போர் நிலை முடிவது எப்போது?

இடிந்து விழுகின்ற கட்டிடங்கள்

மடிந்து கிடக்கின்ற நல்லுயிர்கள்

பற்றி எரிகின்ற நகரங்கள் உயிர்

பரிதவித்து கிடக்கின்ற மானுடங்கள்

எதுவும்கண்களில்படவில்லையா

விழியில்  கருணை ஒளிஇல்லையா

 இருவீர் வெல்லலும்  இயற்கையும் அன்றே

ஒருவீர் தோற்பினும் தோற்பது

 உம் குடியே என்ற   எம்  ஔவைக்கிழவியின்

கூற்றை

நீவிர் அறியாதவராயின் இம்மண்ணில்

 உம் பிறப்பு  வீணானதாகும்

நிகழும் உம் ஆட்சி  கற்காலமாகும்

எரியாத  அடுப்பின் முன் நின்று

எரியும் மனதுடன்  பரிதவிக்கும்

பாமரர்கள் விடும்  சாபத்தின்  அம்பு

அதிகாரத்தை துளைத்து கொடும்

அக்கிரமங்களை  அழித்துதகர்த்து  

நன்னெறி புகட்டும்  நாள் இனி

வெகு தூரத்தில் இல்லை  நாளை

விடியும் பொழுது அமைதி சூழலை

ஒளியாய்  தரும் என்று  நம்புவோம்!

-கோவையிலிருந்து  உங்கள்

நீலவேணி தேவராஜன்

தேர்தல்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"தோழமை தொடர்வோம்; களத்தில் வெல்வோம் -175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது!"- ஸ்டாலின் அறிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் 175 இடங்களில் உதயசூரியன் களம் காண இருக்கிறது என்று...

“ `இந்த' தேவைக்கு `இதனுடன்' ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் செல்லலாம்!" – தலைமை தேர்தல் அதிகாரி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி...

சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் சௌமியா அன்புமணி?- பாமக போட்டியிடும் தொகுதிகள், உத்தேச வேட்பாளர்கள்?

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு (அன்புமணி அணி) 18...

RCB: ரூ.16,700 கோடிக்கு விற்பனையான பெங்களூரு அணி; புதிய உரிமையாளர்கள் யார்?

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி மற்றும் பெங்களூர் அணி சமீபத்தில் விற்பனைக்கு...