17
March, 2026

A News 365Times Venture

17
Tuesday
March, 2026

A News 365Times Venture

"உயிருடன் இருந்தால் விடமாட்டோம்" – நெதன்யாகுவுக்கு ஈரான் இராணுவம் நேரடி கொலை மிரட்டல்!

Date:

கடந்த பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் அப்போதைய உச்சத் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் காமேனியின் மகள், மருமகன் மற்றும் 14 மாதப் பேத்தி ஆகியோரும் உயிரிழந்தனர்.

‘இந்தக் கொடூரக் கொலைக்கு பழிவாங்குவோம்’ எனக் குறிப்பிட்ட ஈரான், தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இருக்கும் பகுதிகள் குறிவைத்து தாக்கப்பட்டது. இதற்கிடையில், ‘ஈரான் தாக்குதலில் நெதன்யாகு கொல்லப்பட்டுவிட்டார்’ என ஈரான் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.

6 விரலுடன் நெதன்யாகு

இந்தக் கூற்றை முழுமையாக மறுத்த இஸ்ரேல், நெதன்யாகு உரையாற்றுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த ஈரான், “இந்த வீடியோவில் நெதன்யாகுவுக்கு 6 விரல் இருப்பது போல காட்சிகள் வருகின்றன. இது ஏஐ வீடியோ” எனக் குறிப்பிட்டது. ஆனால், இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், “பிரதமர் நெதன்யாகு நலமாக இருக்கிறார். இவை அனைத்தும் முற்றிலும் வதந்திகள்” என விளக்கம் அளித்துள்ளது.

இதற்கு பதிலளித்திருக்கும் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை’ (IRGC) “நெதன்யாகு குழந்தைகளைக் கொல்லும் குற்றவாளி… எங்கள் தலைவரின் குடும்பத்தைச் சிதைத்த அவரை வேட்டையாடாமல் விடமாட்டோம். ஒருவேளை அவர் கொல்லப்படவில்லை என்றால். அவரை தேடி வேட்டையாடுவோம்” என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

ஈரானின் இந்த நேரடி கொலை மிரட்டல் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் போர் மேகங்களாகச் சூழ்ந்துள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கன்னியாகுமரி: "மானம் உள்ளவர்கள் திமுக-வுக்கு ஓட்டு போடலாமா?" – ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்த பொன்னார்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்,...

`யம்மா… தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை எங்கே?'- தமிழிசையிடம் கேள்வி எழுப்பிய மூதாட்டி!

சட்டம்-ஒழுங்கு பிரச்னையால் தமிழ்நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்...

`அப்செட்டான ரஜினி; டெல்லி கொடுத்த சிக்னல்' – அறிக்கைக்கு பின்னால் நடந்த அரசியல்!

“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்”என்கிற வரிகளோடு ரஜினி வெளியிட்ட...

நெல்லை: காட்டுச் சாலையில் எரிந்து கிடந்த கார் – கருகிக் கிடந்த 4 உடல்களால் அதிர்ச்சி

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டைக்குளம் - ஆற்றங்கரை பள்ளிவாசல் சாலையில்...