18
October, 2026

A News 365Times Venture

18
Sunday
October, 2026

A News 365Times Venture

“உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்; இந்த விளையாட்டு எங்களிடம் செல்லாது'' – நடிகர் பிரகாஷ்ராஜ்

Date:

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவைகளை வலியுறுத்தும் புதிய தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு மத்திய பா.ஜ.க அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தன் எக்ஸ் பக்கத்தில், “உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்.. இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது” எனப் பதிவிட்டிருப்பது வைரலாகிவருகிறது.

புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காதவரை தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி வழங்கப்படாது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் அறிவித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் முதல் மாநிலக் கல்வித்துறை அமைச்சர் வரை கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், புதியக் கல்விக் கொள்கையின் மூலம் இந்தி திணிப்பை அரங்கேற்ற பா.ஜ.க துடிக்கிறது எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அதைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் வார்த்தைப் போர் தொடங்கியது.

அதன் விளைவாக சமூக வலைதளங்களில் #Getoutmodi டிரெண்டானது. அதற்கு எதிராக #Getoutstalin ட்ரெண்ட் செய்யப்படுகிறது. இதற்கு நடுவே, நடிகர் பிரகாஷ் ராஜ் தன் எக்ஸ் பக்கத்தில், “உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்.. இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது.. #GetOutModi” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திடீர்னு போலீஸ் கைது பண்ணிட்டாங்கன்னா… உங்களுக்கான 5 முக்கிய உரிமைகள் இதோ! சட்டம் சொல்வது என்ன?- 3

திடீர்னு போலீஸ் வந்து உங்களைக் கைது பண்ணிட்டாங்கன்னு வச்சுப்போம்... அந்த நேரத்துல...

Chennai Rain: 'முதல்வர் விஜய் ஒவ்வொரு மணி நேரமும் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கிறார்!- அமைச்சர் ஆதவ்!

சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. குறிப்பாக, வடசென்னையில் குறுகிய நேரத்தில் வரலாறு...

அரிசி விலை அதிகரிக்க இதுதான் காரணம் – பின்னணி பகிரும் ரைஸ்மில் உரிமையாளர்!

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக அரிசியின் விலை நாளுக்கு நாள்...

திருச்சி: "விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்!" – தொல்.திருமாவளவன் கோரிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் திருச்சி...