8
April, 2026

A News 365Times Venture

8
Wednesday
April, 2026

A News 365Times Venture

"ஈரான் மீதான போர் நிறுத்தம் 'ஓகே'; ஆனால், லெபனான் மீது தாக்குதல் தொடரும்" – நெதன்யாகு

Date:

இரண்டு வார போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துவிட்டார். ‘எங்களைத் தாக்கவில்லை என்றால் நாங்களும் தாக்குதல் நடத்த மாட்டோம்’ என்று ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த ஈரான் போர் தொடங்கியதற்குக் காரணமே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு என்று கூறப்படுகிறது. அவர்தான் ட்ரம்பிடம் பேசி அமெரிக்காவையும் இந்தப் போருக்குள் வர வைத்தார் என்று சொல்கிறார்கள்.

ஈரான், வளைகுடா நாடுகள்

அப்படிப்பட்ட நெதன்யாகு இந்தப் போர் நிறுத்தத்தை எப்படி பார்க்கிறார் என்று பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவு அவரது எக்ஸ் கணக்கில் இருந்து வெளியிடப்படவில்லை. இஸ்ரேலின் பிரதமர் அலுவலக எக்ஸ் பக்கத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் பதிவில் கூறப்பட்டிருப்பது என்ன?

“ஜலசந்தி திறப்பதோடு, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் மீதான தாக்குதல்களை ஈரான் நிறுத்தினால், இரண்டு வாரத்திற்கு ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துகிறோம் என்கிற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவை இஸ்ரேல் ஆதரிக்கிறது.

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரானின் பக்கத்து நாடுகளான அரபு நாடுகள் மற்றும் உலகத்திற்கும் ஈரான் அணு ஆயுத, ஏவுகணை மற்றும் தீவிரவாத அச்சுறுத்தலாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும் அமெரிக்காவின் முயற்சியையும் இஸ்ரேல் ஆதரிக்கிறது.

நடக்க இருக்கும் பேச்சுவார்த்தைகளில் இந்த இலக்குகளை அடைவதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு வாரக் கால போர் நிறுத்தத்தில் லெபனான் மீதான தாக்குதல் அடங்காது”.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'காத்திருந்து எலெக்சனுக்கு 30 நாளுக்கு முன்னாடி அவதூறு பரப்புறாங்க – நெல்லையில் விஜய் ஆவேசம்!

தவெக தலைவர் விஜய் இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்....

தேர்தல் களம்:“தோல்வி பயத்தால் அவதூறு பரப்புவது முறையல்ல…" – தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது...

இந்திரா Vs காமராஜர்: தமிழகத்தை உலுக்கிய 1971-ன் அந்தச் 'சதுரங்க' தேர்தல் | Vote Vibes

1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய...

கிருஷ்ணசாமி-ன் வெற்றிக்குக் கைகொடுக்குமா ஒட்டப்பிடாரம்? – களநிலவரம் என்ன?

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரே தனித் தொகுதி ஒட்டப்பிடாரம். தி.மு.க., அ.ம.மு.க., நா.த.க.,...