25
February, 2026

A News 365Times Venture

25
Wednesday
February, 2026

A News 365Times Venture

"இஸ்லாமியருக்கு இடம் மறுப்பு, தலித் சமைத்த உணவுக்கு எதிர்ப்பு.." – உச்ச நீதிமன்ற நீதிபதி கவலை

Date:

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் ஆழமான சமூகத் தவறுகள் நீடிப்பது கவலையளிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் தெலங்கானா நீதிபதிகள் சங்கம் மற்றும் மாநில நீதித்துறை அகாடமி சார்பில் கடந்த பிப்ரவரி 21 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் நீதிபதி உஜ்ஜால் புயான் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, “பொது ஒழுக்கம் அல்லது பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை விட, அரசியலமைப்பு ஒழுக்கமே ஒரு நீதிபதிக்கு மிக முக்கியமானது. சமூகத்தில் இன்றும் நிலவும் பாகுபாடுகளை விளக்க உங்களுடன் இரண்டு செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.

உச்ச நீதிமன்றம்

என் மகளின் தோழி ஒருவர். முனைவர் பட்டம் பயிலும் அந்த மாணவி தெற்கு டெல்லியில் தங்குமிடம் தேடிச் சென்றபோது, அவரது குடும்பப் பெயரைக் கேட்ட விடுதி உரிமையாளர், அவர் ஒரு முஸ்லிம் என்பதை அறிந்ததும் இடம் தர மறுத்துவிட்டார். இதேபோல் ஒடிசாவில் தலித் பெண் சமைத்த மதிய உணவை, சாதி பாகுபாடு காரணமாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சாப்பிட விடாமல் தடுத்துள்ளனர். இத்தகைய சம்பவங்கள் சமூகத்தில் மறைந்து கிடக்கும் பெரிய அவலங்களின் ஒரு சிறு பகுதி மட்டுமே.

2009-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய ‘நாஸ் அறக்கட்டளை’ (Naz Foundation) வழக்கை கவனித்தால், தன்பாலின ஈர்ப்பு குற்றமாக்கும் சட்டப்பிரிவுகளை ரத்து செய்த அந்தத் தீர்ப்பு, பெரும்பான்மை மக்கள் எதை ஒழுக்கம் என்று கருதுகிறார்களோ அதை விட, அரசியலமைப்புச் சட்டம் எதைச் சரி என்று சொல்கிறதோ அதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை உறுதி செய்தது. ஒரு செயலைப் பொதுமக்கள் நிராகரிக்கிறார்கள் என்பதற்காக, சட்டப்பிரிவு 21-ன் கீழ் ஒரு குடிமகனுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அரசு பறிக்க முடியாது.

Justice Ujjal Bhuyan
Justice Ujjal Bhuyan

அரசியலமைப்பு ஒழுக்கம் என்பது ஜனநாயக நிறுவனங்கள் தங்களைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வதையும், அரசியலமைப்பு விழுமியங்களைக் கடைப்பிடிப்பதையும் உறுதி செய்கிறது. நிர்வாக அதிகாரம் மற்றும் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு தனிநபர்களின் உரிமைகளை நசுக்கக் கூடாது என்பதில் நீதிமன்றங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அதிகார பலத்தை விட சட்டத்தின் மாண்பே ஒரு தேசத்தை வழிநடத்த வேண்டும்.

முன்னாள் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ‘துர்குட்’ மார்ஷலின் பொன்மொழி ஒன்று உண்டு `ஒரு நீதிபதியின் உண்மையான அதிகார ஆதாரம் என்பது பதவியோ அல்லது சட்ட அதிகாரமோ அல்ல. அரசியலமைப்பின் மீதான அவரது அசைக்க முடியாத நம்பகத்தன்மையும், அதன் மூலம் அவர் ஈட்டும் மக்களின் மரியாதையும் மட்டுமே'” எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

நல்லகண்ணு: 'உரிமைக்காகப் போராடிய அவரது சேவை என்றும் நினைவில் நிற்கும்'- அரசியல் தலைவர்கள் இரங்கல்

இந்திய அரசியலில் மிக மூத்த தலைவர்களில் ஒருவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான...

`அடுத்த நகர்வுக்கு தயாராகும் காங்கிரஸ்' –  ராகுல் நடத்த போகும் பேரணி

தி.மு.க-வுடனான கூட்டணியை இறுதி செய்வதில் காங்கிரஸ் கட்சி பல்வேறு சிக்கல்களை சந்தித்து...

தோழர் நல்லகண்ணு : தமிழ்ச் சமூக பாட்டாளி வர்க்கத்தின் நூற்றாண்டு ஒளி!

'அதிகாரம் கொடியது!'இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் அது. நல்லகண்ணு...

அறம்… நேர்மை.. நம்பிக்கை! எளிய மக்களின் `தோழர்' நல்லகண்ணு | வாழ்க்கை பயணம்

1925-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி... நூற்று ஒரு ஆண்டுகளுக்கு...