27
February, 2026

A News 365Times Venture

27
Friday
February, 2026

A News 365Times Venture

`இஸ்ரேல் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட அதே நாளில்தான் நான் பிறந்தேன்.!' – பிரதமர் மோடி

Date:

இஸ்ரேலுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, புதன்கிழமை (நேற்று) இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். 2017-க்குப் பிறகு இந்தியாவின் பிரதமர் பிரதமர் மோடி மேற்கொண்ட இரண்டாவது இஸ்ரேல் பயணம் இது.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் மோடி. அவர் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோது உறுப்பினர்கள் ‘மோடி, மோடி’ என முழக்கமிட்டு எழுந்து நின்று உற்சாக வரவேற்பளித்தனர். அதைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, “இஸ்ரேல் இந்தியாவால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட அதே நாளில்தான் நான் பிறந்தேன். இங்கு உரையாற்றுவது ஒரு சிறப்பு மற்றும் மரியாதை. இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவு இன்று நேற்று தொடங்கியதல்ல, இது 2000 ஆண்டுகளுக்கு மேலானது.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி

யூதர்களின் புனித நூல்களான ‘தால்முட்’ மற்றும் ‘எஸ்தர் புத்தகம்’ ஆகியவற்றில் இந்தியாவுடனான வணிகத் தொடர்புகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2023, அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. நாங்கள் உங்கள் வலியை உணர்கிறோம், துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். இந்தியா இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறது. மும்பை 26/11 தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாத ‘ஜீரோ டாலரன்ஸ்’ கொள்கையைக் கொண்டுள்ளது. காசா பகுதியில் நீடித்த அமைதியை ஏற்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இந்தியா தனது முழு ஆதரவை வழங்கும்.” என்றார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு இஸ்ரேலின் உயரிய நாடாளுமன்ற கௌரவமான ‘க்னெசெட் சபாநாயகர் பதக்கம்’ முதல் முறையாக பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்தப் பதக்கத்தைப் பெற்ற பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், “எனக்கு வழங்கப்பட்ட பதக்கத்தை தாழ்மையுடனும் நன்றியுடனும் ஏற்றுக் கொள்கிறேன். இந்த கௌரவம் ஒரு தனிநபருக்கானது அல்ல, மாறாக இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான நீடித்த நட்புறவு மற்றும் இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் விழுமியங்களுக்கான அங்கீகாரம்” எனப் பதிவிட்டிருந்தார்.

விருதுடன் மோடி
விருதுடன் மோடி

ஏற்கனவே 2018-ஆம் ஆண்டு, பாலஸ்தீனத்திற்குப் பயணம் மேற்கொண்டபோது, வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் அந்த நாட்டின் மிக உயரிய விருதான ‘கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீனம்’ (Grand Collar of the State of Palestine) விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளின் உயரிய விருதுகளையும் பெற்ற தலைவர்களின் பட்டியலில் மோடி இணைந்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"தீய சக்தி திமுக-வை தாய் கழகம் என்று நினைத்து கொண்டு.!"- ஓ.பி.எஸ் குறித்து சசிகலா

அதிமுகவில் மூன்று முறை முதலமைச்சராகவும், 5 முறை எம்.எல்.ஏ வாகவும் ...

`ஓ.பன்னீர்செல்வம் செய்தது துரோகத்தின் உச்சக்கட்டம்!' – திமுகவில் இணைந்தவரை விளாசும் அதிமுக

அ.தி.மு.க-வில் நீண்டகாலம் முக்கிய பொறுப்புகளை வகித்த ஓ.பி.எஸ்., 2017-ல் ஜெயலலிதா மறைவுக்குப்...

'எனக்கு தான் சீட்!' முட்டி மோதும் உடன்பிறப்புகள் – 'ஹைப்' ஏற்றும் நிலவரம்! பரபரக்கும் புதுக்கோட்டை

சுதந்திர இந்தியாவோடு கடைசியாக இணைந்த சமஸ்தானம், முதல் பெண்  மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி, நடிகர்கள் பி.யூ.சின்னப்பா, ஜெமினி கணேசன் ஆகியோர் பிறந்த பகுதி என்று புதுக்கோட்டை தொகுதிக்கு நிரம்ப வரலாறு இருக்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற  தொகுதிகளில் ஒன்றாக விளங்கும் தொகுதி புதுக்கோட்டை. வியாபார நிறுவனங்கள், நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாய பயிர்கள் சாகுபடி ஆகியவை தொகுதி மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்நிலையில், இந்த தொகுதியில் சீட் பெற...

முதலில் ராஜினாமா… பின் திமுக! – முடிவெடுத்த ஓபிஎஸ்?

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு,...