20
February, 2026

A News 365Times Venture

20
Friday
February, 2026

A News 365Times Venture

`இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு’ – யோகி ஆதித்யநாத் பேச்சு

Date:

இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் மக்களவைத் தொகுதியின் எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி, சமீபத்தில் ‘பா.ஜ.க’வின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து, “முஸ்லிம்கள் ஆபத்தில் உள்ளனர்” என்று பேசியிருந்தார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இதற்குப் பதிலளிக்கும் வகையில் சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில், “இந்துக்களும், இந்து பாரம்பரியமும் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் தாங்களும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை உணர வேண்டும்.” என்று பேசியிருக்கிறார்.

ஒவைசி

இதுகுறித்துப் பேசியிருக்கும் யோகி ஆதித்யநாத், “முஸ்லிம்கள் யாரும் ஆபத்தில் இல்லை. அவர்களின் (அசாதுதீன் ஒவைசி) வாக்கு வங்கிதான் ஆபத்தில் உள்ளது. இந்திய முஸ்லிம்கள் தங்களின் மூதாதையர்களைப் புரிந்து கொள்ளும் நாளில், இதுபோன்றவர்கள் தங்களின் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறே வேண்டியது தான்.

கடந்த 1947ம் ஆண்டுக்கு முன்பு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசமும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. உண்மையை நாம் எப்படி மறக்க முடியும்? பாகிஸ்தானில் ஹிங்லாஜ் மாதா கோவில் இல்லையா? வங்கதேசத்தில் தகேஷ்வரி மாதா கோயில் இல்லை?

யோகி ஆதித்யநாத்

நூறு இந்து குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் பாதுகாப்பாக இருக்க முடியும். அனைத்து மத பழக்க வழக்கங்களையும் சுதந்திரமாக பின்பற்ற முடியும். ஆனால், நூறு முஸ்லிம் குடும்பங்களுக்கு மத்தியில் 50 இந்து குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா, இல்லை. வங்கசேதம் அதற்கு உதாரணம், முன்பு பாகிஸ்தான் அதற்கு உதாரணம். ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது.

நாம் தாக்கப்படுவதற்கு முன்பு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதைத்தான் கவனத்தில் கொள்ளவேண்டும். உத்தரப் பிரதேசத்தில் 2017-க்கு முன்பு கலவரம் நடந்திருந்தால், அதில் இந்து கடைகள் எரிந்தால் முஸ்லிம் கடைகளும் எரிந்திருக்கும், இந்து வீடுகள் எரிந்தால் முஸ்லிம் வீடுகளும் எரிக்கப்பட்டிருக்கும்.

யோகி ஆதித்யநாத்

2017-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு கலவரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நான் ஒரு சாதாரண உத்தரப் பிரதேச குடிமகன். நானொரு யோகி, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பும் யோகி.” என்று பேசியிருக்கிறார்.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திமுக கூட்டணியில் 'ஹவுஸ்புல்' – தொகுதிப் பங்கீட்டில் ஸ்டாலினுக்குக் காத்திருக்கும் சவால் என்ன?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தடபுடலாக தயாராகி கொண்டிருக்கின்றன.பேரணி, பிரசாரம்,...

KN Nehru: “இதெல்லாம் எங்களுக்கு பின்னடைவல்ல…" – நீதிமன்ற உத்தரவு குறித்து ஆர்.எஸ் பாரதி!

அமைச்சர் கே.என்.நேரு மீதான அமலாக்கத்துறையின் ஊழல் புகாரின் அடிப்படையில் அவர் மீது...

`எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி' – சட்டமன்றத்தில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்!

ஸ்டாலின்மனநிறைவுடன் நிற்கிறேன்16-வது சட்டமன்றத் தொடரின் நிறைவு நாளான இன்று, முதல்வர் ஸ்டாலின்...

மதுரை: அதிமுக-வில் இணையும் அழகிரி ஆதரவாளர்கள்; அமைச்சர் தொகுதி டார்கெட்டா? – தடதடக்கும் களம்!

திமுக-வின் மதுரை முகமாக இருந்தவர்தான் முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க.அழகிரி....