8
May, 2026

A News 365Times Venture

8
Friday
May, 2026

A News 365Times Venture

"அஸ்ஸாமில் வாக்களிக்க 50,000 பேர் உ.பி-யிலிருந்து வந்திருக்கின்றனர்" – மம்தா 'பகீர்' குற்றச்சாட்டு

Date:

மேற்கு வங்கத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேசியத் தலைவர்களின் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், பா.ஜ.க மீது மேற்கு வங்க முதல்வர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

மேற்குவங்கத்தின் பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள டெண்டுலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் கீழ் நாட்டில் உள்ள எந்தவொரு அமைப்பும் நடுநிலையுடன் செயல்படவில்லை. காவி கட்சி அந்த அமைப்புகள் அனைத்தையும் விலைக்கு வாங்கிவிட்டது.

மம்தா பானர்ஜி

உத்தரப்பிரதேசத்திலிருந்து 50,000 பேர் கொண்ட ஒரு ரயில் நிறைய ஆட்கள் அஸ்ஸாமிற்குக் கொண்டுவரப்பட்டனர். அசாம் தேர்தலில் வெற்றிபெற, அம்மாநில மக்களிடமிருந்து வாக்குகளைப் பெறுவதில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால், பா.ஜ.க வெளியிலிருந்து ஆட்களைக் கொண்டுவந்திருக்கிறது. பாம்பைக் கூட நம்பலாம். ஆனால் பா.ஜ.க-வை நம்பவே கூடாது.

வெளியிலிருந்து ஆட்களைக் கொண்டுவரும் அதே உத்தியை மேற்கு வங்கத்திலும் பயன்படுத்த பா.ஜ.க முயற்சிக்கிறது.

இந்த முயற்சி காரணமாகவே பல அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். ஆட்கள், பணம் மற்றும் போதைப்பொருட்கள் ஆகியவை வெளியிலிருந்து கொண்டுவரப்படுகின்றன. ஆனால் எங்கள் தொண்டர்கள் இவற்றை எதிர்த்துப் போராடி நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் (SIR) போது, ​​90 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஒரு செய்தித்தாள் அறிக்கையின்படி, நீக்கப்பட்ட அந்த 90 லட்சம் பெயர்களில் 60 லட்சம் பெயர்கள் இந்துக்களுடையவை. 30 லட்சம் பெயர்கள் முஸ்லிம்களுடையவை.

அஸ்ஸாமில் வாக்கு சேகரித்த மோடி
அஸ்ஸாமில் வாக்கு சேகரித்த மோடி

அஸ்ஸாமில் நடைபெற்ற தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) திருத்தப் பணியின்போது, ​​பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 19 லட்சம் பெயர்களில் 13 லட்சம் பெயர்கள் இந்துக்களுடையவை. 6 லட்சம் பெயர்கள் முஸ்லிம்களுடையவை. பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பெயர்களில் பல பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் அடங்கும். பா.ஜ.க-வை ஒருபோதும் நம்பக்கூடாது.

எனது தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி உங்களுக்கு வேண்டும் என்றால், அனைத்துத் தொகுதிகளுக்கும் வேட்பாளர் நானே எனக் கருதி வாக்களியுங்கள். இங்குள்ள மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உணவருந்துகிறார்கள். ஆனால், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அத்தகைய சூழல் இல்லை.

பீகார் மாநிலத்தில் மீன் உண்பதற்கு அனுமதி இல்லை. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கேரளம்: `பாஜக 3 இடங்களை வென்றிருப்பது கவலையளிக்கிறது' – தேர்தல் தோல்வி குறித்து பினராயி விஜயன்

கேரளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் 102...

தவெக: “மக்கள் தீர்ப்புக்கு இழைக்கப்படும் அவமதிப்பு!" – நடிகை ஸ்ரேயா சரண் பதிவு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்ததிலிருந்து, தொடர்ந்து சலசலப்புடன் நகர்ந்துகொண்டிருக்கின்றன நாள்கள். இந்தத்...

தவெக: “திமுக – அதிமுக கூட்டணி அமைந்தால் பேரழிவு!” – நடிகர் விஷால் எச்சரிக்கை

தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான சூழல்கள் நிலவி வரும் வேளையில், நடிகர்...

TVK: “2 பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தைக் காக்க…" – எம்.பி மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்ததிலிருந்து, தொடர்ந்து சலசலப்புடன் நகர்ந்துகொண்டிருக்கின்றன நாள்கள். இந்தத்...