9
May, 2025

A News 365Times Venture

9
Friday
May, 2025

A News 365Times Venture

'அரசியல் கோமாளி… நான் பதில் கூறுவதாக இல்லை' – அண்ணாமலை மீது செந்தில் பாலாஜி விமர்சனம்

Date:

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அமலாக்கத்துறை சோதனை இன்னும் முழுமையாக முடியவில்லை. சோதனை நிறைவடைந்த பிறகு அதுகுறித்து பதில் அளிக்கிறேன்.” என்றவரிடம் செய்தியாளர்கள்,

செந்தில் பாலாஜி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “அரசியல் கோமாளிகளுக்கு நான் பதில் கூறுவதாக இல்லை.

இதுகுறித்து நான் ஏற்கெனவே உங்களிடம் கூறியுள்ளேன். அவர் ஒரு நிலைப்பாட்டில் இருக்க மாட்டார். காலையில் ஒரு செய்தி.. மாலை ஒரு செய்தி.. இரவு ஒரு செய்தி என்று இருப்பார். நமக்கெல்லாம் நிறைய வேலை இருக்கிறது. அவரின் பெயரையெல்லாம் வரும் நாள்களில் தவிர்த்து விடுங்கள்.

அண்ணாமலை

மக்களை பார்த்து சொல்வதற்கு அவர்களிடம் கருத்துகள் இல்லை. அதனால் பத்திரிக்கை ஊடகங்களில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

ஒவ்வொரு கட்சியும்.. அவர்கள் கட்சியின் கொள்கைகளை கருத்துக்களாக சொல்லத்தான் செய்வார்கள். முதலமைச்சரின் திட்டங்கள் தமிழ்நாட்டின் அடித்தள மக்கள் வரை சென்று சேர்ந்துள்ளன. முதலமைச்சர் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலின்

ஒவ்வொரு திட்டத்தையும் அவர் பார்த்து பார்த்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். மக்களோடு மக்களாக யார் இருக்கிறார்கள் நாட்டுக்காக யார் உழைக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.” என்றார். 

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

முடக்கப்பட்ட 'The Wire' இணையதள பக்கம் – செய்தி நிறுவனம் சொல்வதென்ன?

'The Wire' இணையதளம் மத்திய அரசால் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி...

3 புறமும் பாகிஸ்தான்; ஒரே சாலை தான் வழி – போர் பதற்றமின்றி இருக்கும் இந்த பஞ்சாப் கிராம மக்கள்!

காஷ்மீரில் கடந்த மாத இறுதியில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய...

India – Pakistan Tension: நேற்று தொடங்கிய இந்தியா – பாக். தாக்குதல்; இதுவரை நடந்தது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முதல் கடும் தாக்குதல் நடந்து...

கழுகார்: `சாம்பிராணி போட்ட காக்கி மாஜி டு பாலியல் வழக்கு தொழிலதிபரிடம் கார் வாங்கிய மாவட்டப் புள்ளி!

பூகம்பங்களைக் கிளப்பவிருக்கும் ‘கிங்’ புள்ளி!சாம்பிராணி போட்ட காக்கி மாஜி...கட்சிக்காக உழைத்த சீனியர்கள்...