21
March, 2026

A News 365Times Venture

21
Saturday
March, 2026

A News 365Times Venture

அதிமுக – பாஜக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு விவரம் எப்போது வெளியாகும்? – டெல்லியில் இபிஎஸ் பதில்

Date:

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க நேற்று (மார்ச். 19) டெல்லி சென்றிருந்தார்.

அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி

இவரைத் தொடர்ந்து இன்று அமமுக தலைவர் டிடிவி தினகரனும், பாமக தலைவர் அன்புமணியும் இன்று (மார்ச்.20) அமித்ஷாவைச் சந்திக்க டெல்லி சென்றிருக்கின்றனர்.

இந்நிலையில் அமித்ஷாவைச் சந்தித்தப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட நிறைவு பெற்றுவிட்டன.

புதிய கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த விவரங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நான்கு நாள்களுக்குள் வெளியிடப்படும். எங்கள் கூட்டணியில் எந்தச் சிக்கலும் கிடையாது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

யார், யாருக்கு எந்ததெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ? அதன் அடிப்படையில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை” என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து சி.வி சண்முகம் நடிகை குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு, “சி.வி சண்முகம்தான் பேசியது தவறு என்று உணர்ந்து மன்னிப்புக் கேட்டுவிட்டார். இதைப் பற்றி இனி விவாதிக்க வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

நாங்க இருக்கிறோம்! ட்ரம்ப் திட்டியபிறகு ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆதரவு

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதல் காரணமாக...

'புகார் மட்டும் சொல்கிறார்கள்; ஆனால், உதவவில்லை; கோழைகள்" – NATO-வை சாடும் ட்ரம்ப்

ஈரான் போர் தொடங்கி இன்றோடு நான்காவது வாரம் தொடங்குகிறது. ஈரான், அமெரிக்கா,...

"அமெரிக்க எங்களிடம் அனுமதி கோரியது, ஆனால் நாங்கள்.!"- அநுர குமார திசாநாயக்க சொல்வது என்ன?

ஈரான் போரில் ஈடுபட்டிருந்த விமானங்களை இலங்கையில் தரையிறக்குவதற்கான கோரிக்கையை நிராகரித்ததாக இலங்கை...