25
February, 2026

A News 365Times Venture

25
Wednesday
February, 2026

A News 365Times Venture

`அடுத்த நகர்வுக்கு தயாராகும் காங்கிரஸ்' –  ராகுல் நடத்த போகும் பேரணி

Date:

தி.மு.க-வுடனான கூட்டணியை இறுதி செய்வதில் காங்கிரஸ் கட்சி பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், தி.மு.கவுக்கு செக் வைக்கும் ஏற்பாட்டில் களம் இறங்கியுள்ளது காங்கிரஸ்.

ஆட்சியில் பங்கு என்கிற முழகத்தை எழுப்பி, தி.மு.க கூட்டணியில் அதிர்வலையை ஏற்படுத்தினார்கள் காங்கிரஸ்  நிர்வாகிகள். மறுபுறம் தி.மு.க-வுடன்  கூட்டணியை இறுதி செய்யும் வகையில் டெல்லியிலிருந்து பொதுச் செயலாளரை சென்னைக்கு அனுப்பியது காங்கிரஸ்.

மறுநாள் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், தமிழக பொறுப்பாளரும்  சி.ஐ.டி காலனியில் உள்ள கனிமொழி வீட்டிற்கு விசிட் அடித்தார்கள். கனிமொழியுடன் சீட் எண்ணிக்கை குறித்து அப்போது பேசப்பட்டுள்ளது. தங்கள் தரப்பில் 28 தொகுதிகளுக்கு மேல் தரமுடியாது, என்பதை கனிமொழி சொல்ல, 39 தொகுதிகள் ஒரு ராஜ்யசபாவை காங்கிரஸ் எதிர்பார்ப்பதாக செல்வபெருந்தகை தரப்பு சொல்லியுள்ளார்கள். 

காங்கிரஸ் – திமுக

இதனால் தி.மு.க- காங்கிரஸ் இடையேயான கூட்டணி சிக்கல் தொடர்ந்து நீடித்து வந்தது. மறுபுறும் மற்றொரு டீம் மூலம் த.வெ.க தரப்பையும் காங்கிரஸ் சத்தமில்லாமல் தொடர்பு கொண்டுவருகிறது. ஆனால், த.வெ.க-வுடன் கூட்டணி அமைத்தால் எத்தனை எம்.எல்.ஏ-க்கள் வெற்றி பெறுவார்கள் என்கிற சந்தேகம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. இதனால் எப்பயும் தி.மு.க-வுடன் கூட்டணியை இறுதி செய்யவே காங்கிரஸ் முயல்கிறது. 

இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டி அடுத்த அதிரடி திட்டத்தை கையில் எடுத்துள்ளது. தி.மு.கவிடம் தங்கள் பலத்தை காட்ட முடிவெடுத்துள்ளது. ராகுல் காந்தியை அழைத்து சென்னையில் ஒரு லட்சம் நபர்கள் பங்கேற்கும் பேரணி ஒன்றை நடத்தி காங்கிரஸ் கட்சியின் பலத்தை காட்டும் முடிவை கையில் எடுத்துள்ளதாம். 

மார்ச் மாதம் 5-ம்  ராகுல் காந்தி சென்னை வருகை தர உள்ளார். சென்னை புறநகரில் காங்கிரஸ் கட்சயின் பேரணியை துவக்கி வைத்து உரையாற்றும் திட்டம் இப்போதுள்ளது. இந்த நிகழ்வில் இதுவரை தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு கொடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.

மற்றொருபுறம் தி.மு.க தங்கள் கோரிக்கையை ஏற்காகவிட்டால், த.வெ.கவுடன் கூட்டணியை இறுதி செய்து மார்ச் 5-ம் தேதி ராகுல் காந்தியுடன் விஜயை கைகோர்த்து நடக்க வைக்கும் திட்டமும் காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பிடம் உள்ளது. ராகுல் விசிட்டை வைத்து தங்கள் அரசியல் நகர்வை காட்ட முடிவெடுத்துள்ளது காங்கிரஸ் தலைமை.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவால் இன்று...

நல்லகண்ணு மறைவு: "அரசியல்வாதிகளுக்கு பாடமாக விளங்கியவர்.!"- ஸ்டாலின் நேரில் அஞ்சலி

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவால் இன்று...

நல்லகண்ணு: 'உரிமைக்காகப் போராடிய அவரது சேவை என்றும் நினைவில் நிற்கும்'- அரசியல் தலைவர்கள் இரங்கல்

இந்திய அரசியலில் மிக மூத்த தலைவர்களில் ஒருவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான...